Type to search

டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!

Canada Canada Head Line Canada Top Story WORLD

டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

Toronto பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து, தீவிர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த 10 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார். Toronto shooting- Julianna Kozis, Reese Fallon

ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22ஆம் திகதி) குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 18 வயதான Reese Fallon எனும் பெண் ஒருவர் நண்பர்களுடன் வெளியே வந்தபோது நடந்த துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயமடைந்திருந்தனர். அத்துடன் 29 வயதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டார்.

குறித்த 10 வயது சிறுமியின் தந்தை இச்சம்பவத்தில் காயமடைந்த போதிலும், அதன் வலியை பொறுத்து கொண்டு அச்சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி Julianna Kozis, மார்கம் (margam) பகுதியைச் சேர்ந்தவர் என ரொறன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு மார்கம் மேயர் Frank Scaripitti இரங்கல் தெரிவித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

மேலும் குறித்த துப்பாக்கி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags:

You Might also Like