Type to search

கனடாவில், அகதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Canada Canada Head Line WORLD

கனடாவில், அகதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

கனேடிய மக்களை தவறான வழியில் இட்டுச்செல்லும் முயற்சியில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Canadian government confirmed refugee safety

கனேடிய குடிவரவுத்துறை மற்றும் அகதிகள் தொடர்பான அமைச்சர் அஹமட் ஹசன் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அகதிகள் தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கி கனேடிய பொதுமக்களை தவறான வழியிலிட்டு செல்ல கன்சர்வேட்டிவ் கட்சியினர் முயற்சிக்கின்றனர். எனினும் அவர்களினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையுமில்லை.

கனடாவை பொறுத்தவரையில், கடுமையான வலுவான குடிவரவுக் கொள்கையை கொண்டிருக்கிறது. இதன்மூலம் கனேடிய மக்களையும், அகதிகளின் பாதுகாப்பையும் கனடா அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு உதாரணமாக, சோமாலியாவில் இருந்து அகதியாக வந்த அவர், இன்று கனடாவின் அமைச்சராக செயற்படுவதை அஹமட் ஹசேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனேடிய பிரதமர் அண்மையில் அகதிகள் தொடர்பில் டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனாலே கனடாவுக்குள் அதிகமான அகதிகள் வருவதாக கன்சர்வேட்டிவ் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டையும் கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் முற்றாக மறுத்துள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags:

You Might also Like