Type to search

அகதிகளை வெளியேற்ற போவதாக அறிவித்துள்ள கனடா!

Canada Canada Top Story WORLD

அகதிகளை வெளியேற்ற போவதாக அறிவித்துள்ள கனடா!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

கனடாவில் தஞ்சம் கோரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான விடயத்தில் ஒன்ராறியோ அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. Ontario government different refugee opinion

அந்தவகையில் ஒன்ராறியோ மாநில அரசு, புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் அஹமட் ஹுசெய்ன் தெரிவித்துள்ளார்.

கனடிய மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் அஹமட் ஹூசெய்னுக்கும், ஒன்ராறியோ மாநில குடிவரவுத்துறை அமைச்சருக்கும் (Lisa MacLeod) இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் மாநில அரசு குற்றம் சுமத்துவதை போல தவறான நடவடிக்கைகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒன்ராறியோ அரசு, கனடிய விழுமியங்களுக்கு முரணான, ஆபத்தான முனைப்புகளை கையாள்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் அவர், கனடாவுக்குள் உள்வாங்கப்படும் குடிவரவாளர்களுடன் இணைக்காது, தனியான ஒரு நடைமுறையின் கீழேயே புகலிடக் கோரிக்கையாளர்களை உள்வாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த இரு நடைமுறைகளின் வேறுபாட்டையும் புரிந்துகொள்ளாது ஒன்ராறியோ அரசு குழப்பகரமான கருத்துகளை வெளியிட்டு வருவது பொறுப்பற்ற செயல் என மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: