Type to search

பிரபல பாடகரின் திருமண நிச்சயதார்த்தம்!

Canada Canada Top Story WORLD

பிரபல பாடகரின் திருமண நிச்சயதார்த்தம்!

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

கனடாவை சேர்ந்த பிரபல பொப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும், அமெரிக்க மொடல் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Justin Bieber, Hailey Baldwin engagement

24 வயதான ஜஸ்டின் பீபருக்கும், 21 வயதான அமெரிக்க மொடல் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் அமெரிக்காவில் உள்ள பஹாமாஸ் ரிசார்ட்டில் நிச்சயதார்த்தம் நடந்ததாக இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்பு ரிசார்ட் ஊழியர்களின் மொபைல்களை வெளியே வைக்குமாறு, பீபரின் பாதுகாப்பு பணியாளர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் நிச்சயதார்த்தம் குறித்த செய்திகளை சிஎன்என் மற்றும் ஈ நியூஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஜஸ்டின் பீபரும், ஹெய்லியும் முன்பு 2016 இல் டேட்டிங் செய்து பிரிந்த நிலையில், சமீபத்தில்தான் அவர்கள் மீண்டும் இணைந்தனர்.

இதையடுத்து, தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ஜஸ்டினின் தந்தை ஜெர்மி, ”அடுத்த அத்தியாயத்திற்காக மகிழ்ச்சியுடன் இருப்பதாக” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் ஜஸ்டினின் தாயார் பாட்டி மாலெட் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜஸ்டின் தனது நீண்ட நாள் காதலி செலினா கோம்ஸிடம் இருந்து பிரிந்த பிறகு, ஜஸ்டினும் ஹெய்லியும் மீண்டும் இணைந்துள்ளதாக செய்திதளமொன்று குறிப்பிட்டுள்ளது.

மேலும்; அமெரிக்காவை சேர்ந்த நடிகரும், தயாரிப்பாளருமான ஸ்டீபன் பால்ட்வின்னின் மகளான ஹெய்லி, மாடலிங் பிரசாரங்கள், இசை வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: