Type to search

லட்வியா நோக்கி பயணிக்கும் கனடா பிரதமர்!

Canada Canada Head Line WORLD

லட்வியா நோக்கி பயணிக்கும் கனடா பிரதமர்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

இன்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ லட்வியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். அங்கு அவர் நேட்டோ அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிவரும் கனேடிய படைகளைச் சந்திக்க உள்ளார். அத்துடன் அங்கு பணியாற்றிவரும் கனேடிய இராணுவத்தினருடன் கலந்துரையாடவும் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Canadian president travel Latvia

அதன்பின்னர், பிரசெல்ஸ் செல்லும் கனேடியப் பிரதமர் அங்கு இந்த வாரத்தில் நடைபெறவுள்ள நோட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

பிரதமரின் இந்தப் பயணம், நேட்டோ அமைப்பில் கனேடிய படைகளின் பங்களிப்பினை மீள் உறுதிப்படுத்தும் வகையில் அமைவதாக கருதப்படுகிறது.

2014ஆம் ஆண்டில் ரஷ்ய ஆதரவுக் குழுக்கள் உக்ரெய்னின் கிழக்கு பிராந்தியமான கிரைமியாவை ஆக்கிரமித்தது. இதையடுத்து, அங்கு நேட்டோ படைகளால் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கனடா தலைமையேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், லட்வியாவில் ஏறக்குறைய 450 கனடிய படைகள் நிலை கொண்டுள்ளன. அதுதவிர அல்பேனியா, செக் குடியரசு, இத்தாலி, போலந்து, ஸ்லோவோக்கியா, ஸ்லோவேனியா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் படைகளும் அங்கு முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: