Type to search

ரொறாண்டோவில் பாரிய தீ விபத்து!

Canada Canada Top Story WORLD

ரொறாண்டோவில் பாரிய தீ விபத்து!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

ரொறாண்டோவில், சிற்றி எண்டடெய்மென்ட் பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்று தீயினால் அழிவடைந்தமை தொடர்பாக ரொறாண்டோ தீயணைப்பு படையினர், விசாரணைகளை மேற்கொள்கின்றனர். Toronto downtown heritage building blaze

இந்த தீ விபத்து, கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் பீற்றர், மற்றும் ரிச்மண்ட் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது 100 வருடத்திற்கு மேற்பட்ட ஒரு பாரம்பரிய கட்டிடம்.

இச் சம்பவத்தினை தொடர்ந்து தீயணைப்பு படையினர், குறித்த பகுதிக்கு சென்ற போது கட்டிடத்தின் பொரும்பாலான பகுதிகளில் தீ பரவி புகைமூட்டமாக காணப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இத் தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கட்டிடம் எரிந்து சேதமடைந்துள்ள போதிலும் உள்ளே எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டிடத்தில் பரவிய தீயிணைக் கட்டுப்படுத்தும் பணியில் 75 தொடக்கம், 85 வரையிலான தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதுடன், ஒருவருக்கு சிறிய காயமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

கட்டிடத்திற்கு இவ்வளவு வேகமாக தீ பரவுவதற்கான காரணம் தொடர்பில் தேடிவரும் தீயணைப்பு படையினர், இது தொடர்பான விசாரணைகளை விரிவாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: