நாயகராவில், வார இறுதி நாட்களை கொண்டாட சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Share

நேற்று (ஜூலை 8) ஒண்டாரியோவிலுள்ள நயாகரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் 34 கார்கள் சேதமடைந்துள்ளது. Niagara-on_the-Lake grass fire accident
வார இறுதியில் இடம்பெற்ற லாவெண்டர் நிகழ்விற்காக வந்தவர்களின் வாகனங்கள் புல் வெளியில் தரித்து நின்றபோதே இந்த தீ விபத்து ஏற்பட்டதுடன், தீ மிக வேகமாக பரவியதாகவும், தீ விபத்து இடம்பெற்று சில நிமிடங்களில் 5 கார்கள் முற்றாக சேதமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் பிற்பகல் 3:40 மணியளவில், ஒரு காரின் அடியில் பரவ தொடங்கிய தீ, வேகமாக பரவி, 19 வாகனங்களை முழுமையாக சேதமாக்கியதுடன், 15 வாகனங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பதினொரு தீயணைப்பு வாகனங்களும், 40 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள் தீயை முழுமையாக கட்டுப்படுத்தியதுடன், காயங்கள் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதுவரை 1.2 மில்லியன் டாலருக்கும் 1.5 மில்லியன் டாலர்களுக்கும் இடையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவல் ஏற்படலாம், ஆகவே புல்வெளியில் வாகனம் நிறுத்த வேண்டாம் என நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு எச்சரிக்கை செய்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதனால் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பெண் நிருபரிடம் கனடா பிரதமர் தகாத முறையில் நடந்த கொண்டதாகப் புகார்!
- இஸ்லாமிய புனித இடங்களில் நிர்வாண போட்டோஷூட் (புகைப்படம் உள்ளே)!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- குட்டியாக இருந்ததால தான் சீரழித்தேன்- அதிர்ச்சி வாக்குமூலம்!
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- france.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com