Type to search

கனடாவில் அதிகரிக்கும் பலிகளின் எண்ணிக்கை!

Canada Canada Head Line WORLD

கனடாவில் அதிகரிக்கும் பலிகளின் எண்ணிக்கை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கனடா கியூபெக்கில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Quebec heat wave death toll rises 54

கனடாவில் கடும் வெப்பநிலை நீடித்து வருகிறது. இதனால் கனடாவில் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

மத்திய கனடாவில் அமைந்துள்ள மொண்ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கனடாவில் சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மொண்ட்ரியல் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என கனடா நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: