Type to search

மனித உரிமை மீறல்களை கணக்கிலெடுக்காத கனடா?

Canada Canada Head Line WORLD

மனித உரிமை மீறல்களை கணக்கிலெடுக்காத கனடா?

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் விருதினைப் பெற்றுள்ள ஃபிரான்சிஸ்கோ வெலன்சியா, மனித உரிமை மீறல்களை கண்டிப்பதில் கனடா கொண்டுள்ள பொறுப்பை மெச்சியுள்ளார். Canada condemning human rights violations

வெனிசுவேலா நாட்டின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், பிரபல வழக்கறிஞருமான ஃபிரான்சிஸ்கோ வெலன்சியா இந்த கிழமை ஒட்டாவாவில் தங்கியிருந்து கனடிய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

இந்நிலையிலேயே மனித உரிமை மீறல்களைக் கண்டிப்பதில் கனடா கொண்டுள்ள பொறுப்பை மெச்சியுள்ளார் அவர். இந்த விடயத்தில் கனடாவின் தலைமைத்துவத்தினை ஏனைய நாடுகள் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் மோசமாகிக் கொண்டுவரும் அரசியல் நிலவரத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணமாக உள்ள அதிபர் நிக்கோலஸ் மடூரோவை கனடா கண்டித்துள்ளமையை சுட்டிக்காட்டியே அவர் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

இதில், குறிப்பாக கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டினால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு கண்டனங்கள் மற்றும் கனேடிய அரசினால் வெனிசுவேலா ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளையும் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெனிசுவேலாவில் இடம்பெறும் அக்கிரமங்களை அதிகமாக கண்டித்த நாடாக கனடா உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், குறித்த விடயத்தில் கனடாவும், அவரும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: