Type to search

கனடாவில், இலங்கை தமிழர்கள் தொடர்ச்சியாக கொலை!

Canada Canada Top Story WORLD

கனடாவில், இலங்கை தமிழர்கள் தொடர்ச்சியாக கொலை!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

இலங்கை தமிழர்கள் இருவர் உள்ளிட்ட பலரை கனடா ரொரான்றோ பகுதியில் கொலை செய்ததாக குறிப்பிடப்படும் புரூஷ் மெக் ஆத்தர் என்பவரின் ஆதனப்பகுதிகளில் மீண்டும் தோண்டல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. search Canadian serial killer kill Sri Lankan Tamils

இதற்கான பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதே வேளை, இதற்கான காரணங்கள் எதையும் கனேடிய பொலிஸார் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த நடவடிக்கையின்போது தடயப்பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும், அவை குறித்து இறுதி முடிவுகளை அறிவிக்க முடியாதுள்ளதாக கனேடிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையர்களான ஸ்கந்தராஜ் நவரட்ணம் மற்றும் கிருஸ்ணகுமார் கனகரட்ணம் உட்பட பலரை 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொடர் கொலை செய்ததாக மெக் ஆத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்டவர்களின் தகவல்களும் வெளியிடப்பட்ட நிலையிலேயே நேற்று இந்த தோண்டல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேடுதல் நடவடிக்கைகள், மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை பல்வேறு இடங்களை அடையாளம் காட்டுவதாகவும் கனேடிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: