Type to search

ஷாக்லேட் விரும்புபவர்கள் போலந்து செல்லவும்!

Canada Canada Head Line WORLD

ஷாக்லேட் விரும்புபவர்கள் போலந்து செல்லவும்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

போலந்து நாட்டில், 12 டன்கள் சாக்லேட் திரவத்தை ஏற்றி கொண்டு சென்ற கண்டெய்னர் லொறி ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியதால், அதில் இருந்த சாக்லேட் திரவங்கள் சாலையில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீதிகள் முழுவதும் சாக்லேட் திரவத்தால் சூழப்பட்டது. 12 ton Chocolate brought lorry accident Poland

இது குறித்த தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணி குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இந்த சாலையில் கொட்டிய சாக்லேட் திரவங்களை அகற்றி இந்த சாலை சுத்தம் செய்யப்படும் என்றும் அதற்கு லட்சக்கணக்கான லிட்டர் நீர் தேவைப்படும் என்றும் மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் கண்டெய்னர் லொறி டிரைவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சாலையில் கொட்டிய சாக்லேட் திரவத்தை பார்க்க அந்த பகுதியில் மக்கள் குவிந்துள்ளதால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: