Type to search

கனடாவில் பர்தா அணிய தடை!

Canada Top Story France WORLD

கனடாவில் பர்தா அணிய தடை!

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

கனடா குடியுரிமை பெற்ற சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த பெண் அகதி ஒருவர் பர்தா அணிய தடை விதிக்குமாறு கனடா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். Arabian woman asked stop wear purdah

சவுதி அரேபிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் Raif Badawi யின் மனைவியான Ensaf ஹைதர், தனது மூன்று பிள்ளைகளுடன் கனடாவில் தஞ்சம் புகுந்தார். இவர் தொடர்ந்து இணையத்தில் புரட்சிகர கருத்துக்களை எழுதி வந்தார்.

கனடா தினமாகிய ஜூலை 1 அவர்களுக்கு கனடா குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், பர்தா அணிய தடை விதிக்குமாறு அவர் கனடா அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பாக தெரிவிக்கும் போது ‘மனித உரிமைகளே இல்லாத சவுதியில் பிறந்த, கனடா நாட்டவளாகிய நான், பெண்களை வெறுக்கும் ஆண்கள், எந்த உரிமைகளும் இல்லாத வலிமையற்ற பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்தேன்’ என தெரிவித்தார்.

ஒரு அகதியாக நாங்கள் கனடாவில் வாழ்ந்தபோது தங்கள் எல்லையைக் குறிக்கும் நோக்கில் இஸ்லாமியக் குழுக்கள் பெண்களை பர்தா அணியக் கட்டாயப்படுத்துவதை கவனித்தேன். ஆனால், இஸ்லாமில் எங்குமே ஒரு பெண் தன் முகத்தை மூடவேண்டும் என கூறப்படவில்லை.

இது பெண்களை மிருகங்களாகவும், ஆணின் சொத்தாகவும் நடத்தி அவர்களை மனிதத்துவமின்றி அடிமைகளுக்கு ஒத்த உடை உடுத்தச் செய்த, பெண்களை வெறுக்கும் இடைக்காலத்தைச் சேர்ந்த ஆண்களின் கேவலமான செயலாகும்.

இதனாலேயேதான் கனடா குடிமகளாக ஆகிய முதல் நாளில், ஒன்றாரியோவில் பர்தாவை தடை செய்யும் விடயத்தை முன்வைத்துள்ளேன். எனது கோரிக்கையை அரசு ஏற்று நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags: