Type to search

கனடிய மக்கள் பொருட்களை கடத்தி செல்கின்றனர் – டிரம்ப் குற்றச்சாட்டு

Canada Canada Head Line Canada Top Story WORLD

கனடிய மக்கள் பொருட்களை கடத்தி செல்கின்றனர் – டிரம்ப் குற்றச்சாட்டு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்காவில் பாரிய அளவில் வரிவிலக்கு விதிக்கப்பட்ட பொருட்களை கனடிய மக்கள் கொள்வனவு செய்து, அவற்றை தமது வீடுகளுக்கு கடத்திச் செல்லவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே வாசிங்டனில் சிறு வர்த்தக உரிமையாளர்களுடன் மேற்கொண்ட சந்திப்பு ஒன்றின் போது இந்த விமர்சனக் கருத்துக்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரமப் வெளியிட்டுள்ளார். அவருடைய இந்த கருத்தானது கனடிய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு எல்லையிலிருந்து வரும் கனடியர்கள், இவ்வாறு வரியற்ற அமெரிக்க பொருட்களை அள்ளிச் செல்வதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

இவ்வாறான நிலையில் அமெரிக்கா தொடர்ந்தும் ஒரு முட்டாள் நாடாக இவற்றைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பொருட்களுக்கு, குறிப்பாக காலணி போன்ற பொருட்களுக்கு கனடா பெருமளவு வரியினை விதித்துள்ள நிலையில், கனடியர்கள் அமெரிக்காவினுள் நுழைந்து இவ்வாறான பொருட்களை மலிவாக பெற்றுக்கொண்டு தமது வீடுகளுக்கு கடத்திச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா தற்போது அறிவித்துவரும் புதிய வரி நடைமுறகைள் பல்வேறு மட்டங்களில் சர்ச்சைகளைத் தோற்றுவித்துளள நிலையில், அது குறித்தும், குறிப்பாக அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தகம் குறித்தும் அவசர விவாதத்திற்கான அழைப்பினை அமெரிக்க நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •