Type to search

ஒன்டாரியோவில் மின்னல் தாக்கம்: 5 பேர் காயம்

Canada Canada Head Line Canada Top Story WORLD

ஒன்டாரியோவில் மின்னல் தாக்கம்: 5 பேர் காயம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தென்மேற்கு ஒன்டாரியோவில் மின்னல் தாக்கம் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென்மேற்கு ஒன்டாரியோவில் கடுமையான புயல் எச்சரிக்கைகள் நேற்று (திங்கட்கிழமை) விடுக்கப்பட்ட நிலையில், 3 முதியவர்கள் மற்றும் 2 சிறுவர்களும் மின்னல் தாகத்திற்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் இந்த மின்னல் தாக்கத்தின் போது பெரிய மரங்களின் கீழ் நிற்கிறார்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இதன் போது காயமுற்ற 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் உயிராபத்து ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் சீரற்ற வானிலை காரணமாக, 10 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 150 தொடக்கம் 160 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •