Type to search

கணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி

NEWS

கணவனுக்கு பச்சைக் கறுவாடு கொடுத்து தப்பித்த மனைவி

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

குடிபோதையில் இருந்த தனது கணவனுக்கு இரவு உணவின் போது பச்சை கறுவாடு கொடுத்து தப்பித்துக்கொண்ட மனைவி ஒருவர் குறித்த தகவல் மெதகமை பிரதேசத்தில் இருந்து வெளியாகியுள்ளது. (Action wife husband metagame area)

மெதகமைப் பிரதேசத்தில் கணவன், மனைவி மற்றும் மகள் ஒருவர் வசித்து வந்த நிலையில், ஒருநாள் உறவினர்களைச் சந்திக்க இவர்களின் மகள் சென்றிருந்தார்.

அன்றிரவு வீட்டில் இருந்த கணவனுக்கு சொதி ஒன்றை மாத்திரம் சமைத்து விட்டு, தொலைக்காட்சியில் நிகழ்சிகளை மனைவி பார்த்துக் கொண்டிருந்தார்.

இதன்போது, வீட்டிற்கு குடிபோதையில் வந்த கணவன், உணவைப் பரிமாறுமாறு மனைவியிடம் கூறியுள்ளார்.

உணவு உண்ணும் போது, ‘ஏண்டி இந்த சொதிக்கு கறுவாடு ஏதும் போடவில்லையா? எனச் சண்டை பிடித்துள்ளார்.

இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் பெரும் சண்டையில் தான் முடியும் என அறிந்து, ‘இதோ தருகிறேன்’ என கூறி சமையல் அறைக்குச் சென்று அங்கு தொங்க வைத்திருந்த பச்சை கறுவாட்டை எடுத்து இரண்டு, மூன்று துண்டுகள் வெட்டி சொதியினுள் போட்டு ‘சட்டியின் அடியில் தான் இருந்தது’ என்று கூறி பரிமாறியுள்ளார்.

அவரும் உணவை உண்டு முடித்துவிட்டார். மனைவியும் அடி தடியில் இருந்து தப்பித்து விட்டார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Action wife husband metagame area


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: