Type to search

படிக்காதவருக்கு போராசிரியர், சமாதான நீதவான் பட்டம்; இலங்கையில் இப்படியுமொரு சம்பவம்

NEWS

படிக்காதவருக்கு போராசிரியர், சமாதான நீதவான் பட்டம்; இலங்கையில் இப்படியுமொரு சம்பவம்

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

போலியான பெயர் மற்றும் போலியான சான்றிதழ்களுடன் பேராசிரியராக நடித்து பெயர்பெற்ற குற்றவாளி ஒருவருக்கு சமாதான நீதவான் பட்டம் வழங்கியமை தொடர்பாக கல்கிஸ்ஸ பொலிஸ் குற்ற புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (Professor, Peace magistrate post not educated person)

பேராசிரியர் ஜயவர்தன எம்.பி. அத்தநாயக்க என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த நபர், வஹல விதானலாகே மஞ்சுள பிரசன்ன என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த போலி பேராசிரியர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இவர் தெஹிவளை மத்திய மகா வித்தியாலத்தில் தரம் இரண்டு வரையில் கல்வி கற்றுள்ளமை தெரியவந்தது.

அத்துடன், குறித்த நபர் பாடசாலையில் இருந்து விடுப்பு சான்றிதழைக் கூட பெற்றுக்கொள்ளவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எஹலியகொட பிரதேச பொலிஸார் இவருக்கு எதிராக நீதிமன்றில் மூன்று வழக்குகளைத் தொடர்ந்த நிலையில், இவர் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்றும் சிங்கள பத்திரிகையான திவயினவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி அமைச்சின் செயலாளரின் ஊடாக இவர் சமாதான நீதவான் பதவியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், குறித்த நபர் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Professor, Peace magistrate post not educated person


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags:

You Might also Like