Type to search

வடமாகாண கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு

NEWS

வடமாகாண கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

வடக்கு மாகாண கல்வியமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. (Terrorism Prevention Division call Inquiry Northern Provincial minister)

கடந்த ஆண்டு வவுனியா ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் இலங்கை தேசியக் கொடியை ஏற்றாமை தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைமையகத்தில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

விசாரணைக்கான அழைப்பாணையை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் யாழ். பிராந்திய அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சரை நேரில் சென்று அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளனர்.

அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள போதும், அன்றைய திகதியில் அமைச்சருக்கு வேறு வேலைகள் இருப்பதால் பிறிதொரு திகதியில் தனது முறைப்பாட்டை வழங்க முடியும் என அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாரணைக்கான திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Terrorism Prevention Division call Inquiry Northern Provincial minister


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: