அர்ஜூன் அலோசியஸிடம் பணம் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்
Share

பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் மீது பாரிய குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும், 2020 ஆம் ஆண்டு வரை தமது ஆட்சி தொடரும் என்றும் இதனை எவராலும் மாற்றியமைக்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார். (Arjun Aloysius affair comments Minister Palani Thigambaram)
இந்தக் குற்றசாட்டில் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து பணம் வாங்கியதாக சொல்லிக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிடுவதாகவும் இதற்கு இடம்கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் ஊடான 14000 வீட்டுத் திட்டத்தில் 250 வீடுகளை தலவாக்கலை மடக்கும்புர மேல் பிரிவு தோட்டத்தில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா வைபவ ரீதியாக இன்று இடம்பெற்றது.
இந்த விழாவை தலைமை தாங்கி நடத்திய அமைச்சர் திகாம்பரம், தோட்ட தொழிற்சாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்ட பகுதிகளில் லயன்களில் இருந்து பதவிக்கு வந்த இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், திலகராஜ், திகாம்பரம் ஆகிய நாம் எவரிடமும் பணம் வாங்கவில்லை, நேர்மையான சேவையை எம் மக்களுக்கு செய்து வருகின்றோம்.
அத்தோடு பணம் வாங்கியதாக சொல்லப்படும் 118 பேர் தொடர்பில் பிரதமர் ஜனாதிபதியிடம் கூறி குறித்த நபர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்.
அத்தோடு, எனது உயிர் இருக்கும் வரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடு அமைத்துக் கொடுப்பேன். லயம் என்ற அடையாளத்தை மாற்றி எனது மக்களை புதிய கிராமத்தில் சொந்த நிலத்தில் வீடு கட்டி வாழ வைப்பேன்.
இந்திய அரசாங்கம் 14000 வீடுகளை மலையக பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்க உதவிகள் செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த வீடுகளை கட்டியமைக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இன்று வரை 1300 வீடுகள் கட்டப்பட்ட நிலையில் மேலதிகமான வீடுகளை கட்டியமைக்க எனது அமைச்சு இந்திய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும்.
மலையக பெருந் தோட்டப் பகுதிகளில் வேலையற்றவர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டாம் என சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் லயம் ஒன்றில் வாழும் சகல குடும்பங்களுக்கும் தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க நாட்டின் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளேன்.
நான் கட்சி, மதம், ஜாதியை பார்த்து சேவை செய்பவன் அல்ல. என்னுடைய உறவுகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ தனிமையான பொது சேவையை செய்பவனும் அல்ல. மாறாக மலையகத்தில் உள்ள அணைவரும் எனது சொந்தங்கள் என்ற வகையில் அவர்களுக்கு சேவை செய்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
என்னுடைய உயிர் இருக்கும் வரை தோட்ட மக்களுக்கு லயன் வாழ்க்கையை ஒழித்துக் கட்டி தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பேன். இலங்கையில் நாம் வாழ்ந்தாலும், இந்தியா எமது தந்தை நாடு. இந்தியாவின் இரத்தமே எமது உடம்பில் ஓடுகின்றது. இந்தியாவோடும், இலங்கைவோடும் நாம் விசுவாசமாக இருப்போம்.
எனது அமைச்சிக்கு வருபவர்கள் வீடு கேட்டு வரும் நிலை உயர்ந்துள்ளது. எமக்கும் இது ஒரு பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. எமது சமூகத்திற்கு அந்தஸ்த்தை வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
இந்திய அரசாங்கம் பாரிய உதவிகளை செய்தும், செய்து கொண்டும் வருகின்றது. அந்த அரசாங்கம் கட்டியமைக்கும் வீடுகளை இந்திய அரசாங்கத்தின் வீடுகள் தான் என்று பிரச்சாரம் செய்கின்றோம்.
மலையகத்தில் லயனகளை உடைக்கும் அளவிற்கு மக்கள் ஒரு பக்கமாக ஒற்றுமையை பலப்படுத்தி வருகின்றனர். லயம் என்பது எமது அடையாளமாகும்.
இந்த அடையாளத்தை மாற்றியமைத்து புதிய கிராமங்களை அமைத்து சொந்த காணியில் வீடுகளை கட்டி வாழ வேண்டும். இதுவே எனது அவா.
அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இவர்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய சேவை பற்றி ஊடகங்கள் சிலவற்றில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால் விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையை செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
More Tamil News
- வலி. வடக்கில் படையினர் வசமிருந்த 33 ஏக்கர் காணி விடுவிப்பு
- சத்திரசிகிச்சை தோல்வி; கையை இழந்த மாணவன்
- வெளிநாட்டிற்கு இலங்கையர்களை அனுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
- பெண்களை அச்சுறுத்தி கொள்ளை; சாவகச்சேரியில் சம்பவம்
- முஸ்லிம் அமைச்சரால் பொங்கியெழுந்த தமிழ் மக்கள்; மட்டக்களப்பில் சர்ச்சை
- ஸ்ரீலங்கன் விமான சேவை மோசடி; விசாரணை ஆரம்பம்
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Arjun Aloysius affair comments Minister Palani Thigambaram