Type to search

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – ஜெயச்சந்திரன்

INDIA Top Story Uncategorized

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – ஜெயச்சந்திரன்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

human rights commission member report firing incident submitted

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக பொலிஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் சந்தித்து பேசினார்.

மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் செய்தியார்களிடம் கூறியதாவது:

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து மாநில மனித உரிமை ஆணைய தலைவரிடம் ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

human rights commission member report firing incident submitted

More Tamil News

Tamil News Group websites :

 

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஓரிரு நாளில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – ஜெயச்சந்திரன் appeared first on TAMIL NEWS.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •