Type to search

தங்க பிஸ்கட்டுகளுடன் போலந்து நாடடுப் பிரஜை கைது

NEWS

தங்க பிஸ்கட்டுகளுடன் போலந்து நாடடுப் பிரஜை கைது

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

(rs 65 million worth gold detected)
சட்டவிரோதமான முறையில் 100 தங்க பிஸ்கட்டை இலங்கைக்கு கடத்திவர முயன்ற போலந்து நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்றைய தினம் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 8.50 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே 650 என்ற விமானம் மூலம் குறித்த நபர் இலங்கைக்கு வந்துள்ளார்.

குறித்த நபரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது சுமார் 6,75,0000 இலட்சம் ரூபா பெறுமதியான 100 தங்க பிஸ்கட்களை குறித்த நபர் தனது இடுப்பில் கட்டப்பட்ட ஒரு சிறப்பான பட்டியில் மறைத்து வைத்திருந்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 60 வயதுடையவர் என்றும் குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; rs 65 million worth gold detected


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags:

You Might also Like